பேரையூர், :பேரையூர் தாலுகா டி. கல்லுப்பட்டி யூனியன் எஸ்.பாரைப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 80க்கும் மேற்பட்ட மாணவர்கள்படிக்கின்றனர். இடியும் நிலையில் உள்ள ஆபத்தான கட்டடம் உள்ளது. படிக்கட்டுகள் மோசமாக உள்ளதால் மாணவர்கள் விழுந்து காயமடைகின்றனர்.நான்கு அறைகள் உள்ள இப்பள்ளியில் ஒன்றில் அலுவலகமும், மற்ற 3ல் வகுப்புகளும் இயங்குகின்றன. ஒவ்வொரு வகுப்பறையிலும் இரண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. போதுமான கட்டட வசதி இல்லாமல் ஆசிரியர்களும், மாணவர்களும் சிரமத்தில் உள்ளனர்.பழுதான கட்டடத்தை அகற்றிவிட்டு கூடுதல் வகுப்பறைகளுடன் கூடிய புதுக்கட்டடத்தை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.