ஆண்டிபட்டி---ஆண்டிபட்டி சக்கம்பட்டி நன்மைதருவார் ஐயப்பசுவாமி கோயிலில் மகரஜோதி விழா நடந்தது.சபரிமலைக்கு நேர் திசையில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு எதிரே 5 கி.மீ., தொலைவில் நாழி மலையில் நேற்று முன்தினம் மாலை 6:45 மணிக்கு மகா தீபம் ஏற்றி சரணம் ஐயப்பா கோஷமிட்டு வழிபட்டனர். கோயிலில் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், சர்வ பூஜை செய்யப்பட்டது. சுற்றுவட்டார பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் முத்துவன்னியன் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.