பெரியகுளம்--தென்னிந்திய பார்வர்டு பிளாக் மாநில இளைஞர் அணி செயலாளர் துரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.பெரியகுளத்தை சேர்ந்த இவர் வழக்கு விசாரணைக்காக தென்கரை போலீஸ் ஸ்டேஷன் சென்றார். இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன், சுகுமாரை மிரட்டினார்.இவர் மீது தேனி போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்ரே பரிந்துரையில் கலெக்டர் முரளீதரன் உத்தரவில் தென்கரை போலீசார் துரையை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.