மாங்காடு: பூந்தமல்லி, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் மாரி, 42; கொத்தனார். நேற்று முன்தினம் மாலை, மவுலிவாக்கம், ஜோதி நகரில், கால்வாயின் மீது அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரின் மீது அமர்ந்திருந்தார்.
அப்போது, குன்றத்துார் நோக்கி சென்ற கார் ஒன்று, மாரி மீது மோதியது. இதில், அவர் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார். மாரியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர், சுசீந்திரன், 29, என்பவரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.