கொடுங்கையூர் எஸ்.ஐ.,க்கு 'பளார்' | சென்னை செய்திகள் | Dinamalar
கொடுங்கையூர் எஸ்.ஐ.,க்கு 'பளார்'
Added : ஜன 16, 2022 | |
Advertisement
 
Latest district News

கொடுங்கையூர், : கொடுங்கையூரில், முக கவசம் அணியாததற்கு அபராதம் விதித்த, சப் - -இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்த சட்டக்கல்லுாரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.கொடுங்கையூர், எம்.ஜி.ஆர்., நகர் சந்திப்பில், சப் - -இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான போலீசார், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது, அங்கு பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தி, முக கவசம் போடாதது குறித்து விசாரித்தார். உடனே, அந்த வாலிபர், சட்டைப்பையில் இருந்த முகக்கவசத்தை எடுத்து போட்டார். ஆனாலும் விதிமீறியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.இதனால், ஆத்திரமடைந்த வாலிபர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சப் - -இன்ஸ்பெக்டர் பழனியின், கன்னத்தில் அறைந்தார்.புகாரின்படி, கொடுங்கையூர் போலீசார் வியாசர்பாடி, புது நகரைச் சேர்ந்த அப்துல் கரீம் மகன் அப்துல் ரகீம், 21, என்பவரை கைது செய்தனர். இவர், தரமணியில் உள்ள சட்ட கல்லுாரியில், பி.ஏ.பி.எல்., 5ம் ஆண்டு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X