செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், நெல் தரிசில், உளுந்து, பச்சைப்பயிறு சாகுபடி செய்ய வேண்டும் என, வேளாண் இணை இயக்குனர் சுரேஷ்தெரிவித்தார்.வேளாண் இணை இயக்குனர் சுரேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:செங்கல்பட்டு மாவட்டத்தில், சம்பா நெல் பயர் 36,544 ஏக்கர் பரப்பில், பயிரிடப்பட்டு உள்ளது. +
அனைத்து பருவத்திலும், நெல் சாகுபடி செய்வதால், நெல் விலை குறைவு ஏற்படுவதுடன், வயல்களில் மண் வளம் குறைந்து, பூச்சி நோய் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.எனவே, குறைந்த நீரை பயன்படுத்தி அதிக லாபம் பெற, நெல் தரிசில் உளுந்து, பச்சைபயிறு போன்ற பயறு வகைகளை, ஏக்கருக்கு எட்டு கிலோ என்ற அளவில், நெல் அறுவடை செய்த வயலில் விதைப்பு செய்வதால், உளுந்து பயிரில் உள்ள வேர் முடிச்சுகள் மூலம், மண்ணில் சத்துக்கள் நிலை நிறுத்தப்படுகிறது.
மேலும், நெல் பயிரை தாக்கும் பூச்சி மற்றும் பூஞ்சான நோய்கள் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படுகிறது.இவை தழைச்சத்தை கிரகித்து, வேர் முடிச்சிகளில் சேமிப்பதால், நிலத்தின் வளம் கூடுகிறது.அடுத்த பயிர் சாகுபடி செய்யும்போது, உரச்செலவு குறைகிறது. எனவே, விவாசய பெருமக்கள், நெல் அறுவடைக்கு, மேற்கண்ட பயிறுவகைகள் விதைத்து கூடுதல் லாபம் பெற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.