செய்யூர் : பேருந்து நிலையத்தில் இருக்கைகள் இல்லாததால், பயணியர் தரையில் அமரும் அவலம் உள்ளது.செய்யூர், பஜார் பகுதியில் எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் தாசில்தர் அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம், பள்ளிகள் மற்றும் பல அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
தினமும் 100க்கும் மேற்பட்டோர் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.இங்கு இருக்கை வசதி இல்லாத காரணத்தால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் தரையில் அமரும் அவல நிலையில் உள்ளனர். குடிநீர் வசதியும் இல்லாததால் பயணியர் சிரமப்படுகின்றனர்.பயணியர் கூறியதாவது:சரியான முறையில் பேருந்து வசதியும் இல்லை. நிலையத்தில் இருக்கை, குடிநீர் வசதியும் இல்லை.பல அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள இப்பகுதி பேருந்து நிலையத்திற்கே இந்த நிலை. இருக்கை, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.