கல்பாக்கம், : கல்பாக்கம் ராணுவ வீரர்கள், ராணுவ தினம் கடைபிடித்தனர்.நம் நாட்டை முப்படை ராணுவத்தினர் பாதுகாக்கின்றனர். அண்டை நாடுகளிடமிருந்து நம்மை பாதுகாக்க, போரில் உயிர் துறக்கின்றனர்.ராணுவத்தினரை கவுரப்படுத்த, ஜன., 15ம் தேதி, ராணுவ தினமாக கடைபிடிக்கப்படுகிறது.இந்நாளான நேற்று, அணுசக்தி தொழிலக கல்பாக்கம் பகுதியில் பணியாற்றும் ராணுவ படையினர் கடைபிடித்து, வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள், ஆர்வலர்கள் அவர்களை வாழ்த்தினர்.