நெடுஞ்சாலை பணிக்காக புதிதாக ஆபீஸ் அமைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2022
04:55

மாமல்லபுரம் : சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை, கடலோர முக்கிய வழித்தடம். தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், கடந்த 2002 முதல், இதை சுங்க கட்டண சாலையாக நிர்வகித்து பராமரித்தது.இத்தடத்தில், சென்னை - மாமல்லபுரம், 43 கி.மீ., தொலைவு நான்குவழிப் பாதையாக உள்ளது.



இந்நிலையில், சென்னை - கன்னியாகுமரி கடலோர போக்குவரத்து முக்கியத்துவம் கருதி, பாரத்மாலா பாரியோஜனா திட்டத்தின்கீழ், ஒரே தேசிய நெடுஞ்சாலையாக மேம்படுத்த, மத்திய அரசு முடிவெடுத்தது.இதன் ஒரு பகுதியாக, மாமல்லபுரம் - புதுச்சேரி தட, 95 கி.மீ., பகுதியை, கடந்த 2018ல், தேசிய நெடுஞ்சாலை - 332ஏ என மாற்றியது.முதல்கட்டமாக, மாமல்லபுரம் - முகையூர் பகுதியில், 618 கோடி ரூபாய், அடுத்து, முகையூர் - மரக்காணம் பகுதியில் 593 கோடி ரூபாய் என, மொத்தம் 1200 கோடி ரூபாய் மதிப்பில், இத்தடம் மேம்படுத்தப்பட உள்ளது. மாமல்லபுரம் புறவழி, பூஞ்சேரி, வாயலுார் சந்திப்புகள் உள்ளிட்ட பகுதிகளில், 37 மேம்பாலங்கள் அமைய உள்ளன. அரசு, தனியார் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது

.சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு, தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. சாலைமட்ட உயரம், உறுதித்தன்மை, மேம்பால கட்டுமானம் குறித்து ஆய்வு செய்த நிறுவனம், சாலைப் பணிகளை விரைவில் துவக்கவுள்ளது.இதற்காக, கல்பாக்கம் அடுத்த, இளையனார்குப்பம் பகுதியில், கள நிர்வாக அலுவலகம், ஜல்லி கற்கள் - கான்கிரீட் கலவை தயாரிப்பு இயந்திர சாதனங்கள் உள்ளிட்டவற்றுடன் தொழில் வளாகம் அமைத்துள்ளது. பிப்ரவரி மாதத்தில், மாமல்லபுரம் பகுதியில் பணிகளை துவக்கவுள்ளதாக தெரிகிறது.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X