காஞ்சிபுரம் : கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க, திருவிழாக்கள் ரத்து, ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு உள்ளதால், காஞ்சிபுரம் மாவட்ட கிராமங்கள், வெறிச்சோடி காணப்படுகின்றன.
பொங்கல் விழா கண்காணிப்பு பணியில் ஈடுபட போலீஸ் பற்றாக்குறை உள்ளது. இதனால் கிராமங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தலாமா, வேண்டாமா என, கிராமத்தினர் குழப்பத்தில் உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொங்கல் பண்டிகை, ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும். சூரிய பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் அன்று கிராமங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். ஆண்கள், பெண்கள், சிறுவர் - சிறுமியருக்கு ஓட்டப்பந்தயம், கோ - கோ, கோலம் என பல போட்டிகள் நடத்தப்பட்டும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.ஆனால் இந்தாண்டு, கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில்கள் மூடப்பட்டுள்ளன.ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், பொதுமக்கள் காணும் பொங்கலை கொண்டாட வெளியில் செல்ல முடியாத கட்டாயம் ஏற்பட்டுள்ளது.கிராமங்களில் நடக்கும் பொங்கல் திருவிழாவுக்கும் காவல் துறை அனுமதி மறுக்கப்பட்டதால், முக்கிய திருவிழாக்களின்றி களை இழந்துள்ளது.திருவிழாக்களுக்கு தடைகாணும் பொங்கல் அன்று, காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் பழையசீவரம் பகுதிக்கு செல்வார். திருமுக்கூடல் பகுதியில் அமைந்துள்ள வெங்கடேசப்பெருமாள் கோவிலில் எழுந்தருள்வார். ஐந்து ஊர்களை சேர்ந்த பெருமாள் அந்த கோவிலில் ஒன்று சேரும் பார்வேட்டை நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள், அன்று காலையில் இருந்து இரவு வரை தங்கி, சுவாமியரை தரிசனம் செய்வர். இந்த ஆண்டு வரதராஜப்பெருமாள் பார்வேட்டை உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஏகாம்பரநாதர், காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் கிராமத்தில் காணும் பொங்கல் அன்று எழுந்தருள்வார். இந்த விழாவையொட்டி திம்மசமுத்திர கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் காஞ்சிபுரத்தில் இருந்து பல தரப்பட்ட மேள தாளங்களுடன் ஏகாம்பரநாதரை அழைத்து செல்வது, பெரிய ஊர்வலம் போல் காணப்படும்.கிராமத்தில் முக்கிய தெருக்களில் சுவாமி செல்லும் வழியில், மக்கள் வரவேற்பு அளிப்பர்; திருவிழா கோலமாக காணப்படும்.சுவாமி அந்த கிராமத்தில் இரவு வரை தங்குவதால் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். இரவு, அங்கிருந்து கிளம்பி கோவிலுக்கு திரும்புவார். இந்த பார்வேட்டை உற்சவம் இன்று நடைபெறவில்லை.போலீஸ் பற்றாக்குறை காஞ்சிபுரம் அடுத்த செய்யாற்றில் வரும் செவ்வாய் கிழமை இரவு பெருநகர் சுற்றியுள்ள, 20 கிராமங்களைச் சேர்ந்த சுவாமிகள் ஊர்வலமாக சென்று செய்யாற்றில் எழுந்தருள்வர். ஒரே நேரத்தில் அத்தனை சுவாமிகளையும் காண, அந்தந்த கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் ஆற்றில் கூடுவர்.அதிகாலை வரை இந்த கூட்டம் ஆற்றில் காணப்படும். அங்கிருந்து அந்தந்த ஊர்களுக்கு சுவாமி புறப்பட்டு செல்லும். நடப்பாண்டு இந்த திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் அடுத்த தாமல் கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கலன்று மந்தைவெளி மாரி எல்லையம்மன் திருவிழா சிறப்பாக நடைபெறும். பக்தர்கள் அலகு குத்தி, நேர்த்தி கடன் செலுத்தி வாகனங்களில் தொங்கியபடி செல்வர். இந்த ஆண்டு, வேறு ஒரு நாளில் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.பொங்கல் திருவிழா, அந்தந்த கிராமங்களில் பாரம்பரியமாக நடக்கும் விளையாட்டு போட்டிகள் இன்னும் சில கிராமங்களில் நடந்து வருகிறது.தற்போதுள்ள மக்கள் தொகைக்கு தகுந்த மாதிரி, காவல் நிலையங்களில் கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும். போலீஸ் பற்றாக்குறை உள்ளதால் அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.போலீஸ் பற்றாக்குறை காரணமாக முழு பாதுகாப்பு அளிக்க முடியாத சூழல் இருப்பதால், முழு ஊரடங்கு இருந்தாலும், கிராமங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தலாமா என, இளைஞர்கள் குழப்பத்தில் உள்ளனர்.ஒரு சில இடங்கள் தவிர்த்து, பல இடங்களில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பந்தல், மேடை, 'ஸ்பீக்கர்' கட்டி பொங்கல் விழா போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன.நடவடிக்கைஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருப்பதால் காணும் பொங்கல் திருவிழா நடத்த அனுமதி கிடையாது.
அவ்வாறு கிராமங்களில் பாரம்பரிய விளையாட்டு போன்ற போட்டிகள் நடந்தால் இது குறித்து யாராவது புகார் அளித்தாலோ அல்லது அந்த விழாவில் பிரச்னை ஏற்பட்டாலோ, கிராமத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை, பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.எம்.சுதாகர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காஞ்சிபுரம்.போட்டி நடக்கிறதுஎங்கள் கிராமத்தில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நல்ல நாளில் கொரோனாவை காரணம் காட்டி, வீட்டிற்குள் முடங்கி கிடக்க முடியாது. ஊர் கூடும் மக்களிடம் போட்டி கிடையாது, எல்லாரும் வீட்டிலேயே இருங்கள் என எப்படி கூறமுடியும். அதனால், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றி போட்டி நடத்துகிறோம். கிராம இளைஞர்கள்