காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், டாக்டர் கலாம் வழியில் உதவும் கரங்கள் அமைப்பினர், பொங்கல் பண்டிகையையொட்டி திருக்காலிமேடு மாநகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளைநட்டனர்.காஞ்சிபுரம் திருக்காலிமேட்டில், டாக்டர் கலாம் வழியில் உதவும் கரங்கள் அமைப்பு சார்பில், ஆங்கிலம், தமிழ் புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட முக்கிய தினங்களில், மரக்கன்று நடும் விழா நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம், திருக்காலிமேடு மாநகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில், புங்கன், கொய்யா, நெல்லி, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகளை, தன்னார்வலர்கள் நட்டனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தெருவோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு, காலையில் கபசுர குடிநீரும், மதியம் உணவும் வழங்கினர்.