காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், நேற்று, பயணியர் கூட்டம் குறைந்து காணப்பட்டது. இன்று, முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால், மக்கள் வெளியூர் செல்வதை தவிர்த்து விட்டதாக தெரிய வருகிறது.
பொங்கல் பண்டிகை என்றால், மூன்று நாட்கள் கலகலப்பாக இருக்கும். நேற்று, காஞ்சிபுரத்தில் இருந்து, வெளியூர் செல்லும் பயணியர் தவிர்த்து விட்டனர். காணும் பொங்கல் அன்று மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், பேருந்துகளில் பயணியர் கூட்டம் வழக்கத்தை விட குறைவாக காணப்பட்டது. தொடர்ந்து அரசு விடுமுறை என்பதால் கூட்டம் மிகவும் குறைந்தது.இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பொங்கல் விடுமுறை என்பதால் பயணியர் கூட்டம் குறைந்துள்ளது.
மேலும், இன்று, முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் வெளியூர் செல்லும் மக்கள் பயணத்தை தவிர்த்து விட்டனர். இதனால் பயணியர் கூட்டம் இல்லாததால் பஸ்களும் முழுமையாக இயக்க முடியவில்லை. விடுமுறை முடிந்து அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகள் இயங்கினால் பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கும்' என்றார்.