ரூ.9.97 கோடியில் நவீன மீன் அங்காடி | சென்னை செய்திகள் | Dinamalar
ரூ.9.97 கோடியில் நவீன மீன் அங்காடி
Added : ஜன 16, 2022 | |
Advertisement
 

சென்னை : பட்டினப்பாக்கம், லுாப் சாலையின் இருபுறமும், மீன் அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், வார இறுதி நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அதற்கு தீர்வாக, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு மானிய கோரிக்கை விவாதத்தில், 'மீனவர்களும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில், 10.75 கோடி ரூபாய் மதிப்பில், அப்பகுதியில், நவீன மீன் அங்காடி அமைக்கப்படும்' என அறிவித்தார்.

அதன்படி, லுாப் சாலை இருபுறமும், மீனவர்கள் வாழ்வாதாரம் காக்கும் வகையில், 9.97 கோடி ரூபாய் மதிப்பில், அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மீன் அங்காடி கட்ட, அரசின் நிர்வாக அனுமதி கோரி திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.அதன் அடிப்படையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், நிர்வாக அனுமதியும், உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ், 9.97 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் பணி துவங்கப்படும் என, தெரிகிறது.

இதில், சுற்றுச்சுவருடன், 366 மீன் அங்காடிகள், குடிநீர், கழிப்பறை, மீன் சுத்தம் செய்யும் பகுதிகள், மீன் அங்காடியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிக்க, 40 கிலோ லிட்டர் கொள்ளளவு உடைய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட வசதிகள் அமையவுள்ளன.தவிர, 60 இரு சக்கர வாகனங்கள், 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தம், மழைநீர் சேகரிப்பு உட்கட்டமைப்பு வசதி, உயர் மின் கோபுர விளக்குகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X