கோயம்பேடு : போலீஸ் ரோந்து வாகனம் மீது, அரசு பஸ் மோதியதில், போலீசார் இருவர் காயமடைந்தனர்.
நெற்குன்றம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், கோயம்பேடு போக்குவரத்து போலீசார், ரோந்து வாகனத்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, கோயம்பேடில் இருந்து வேலுார் நோக்கி சென்ற அரசு பஸ், ரோந்து வாகனத்தின் மீது மோதியதில் போலீஸ் வாகனத்தின் முன்பகுதி முழுதும் சேதமடைந்தது.இதில், அங்கு பணியில் இருந்த போக்குவரத்து எஸ்.ஐ., ஆனந்தன், 56, காவலர் தண்டபாணி, 38, ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
காயமடைந்த இருவரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து, கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து, அரசு பஸ் ஓட்டுனர் ஜெயக்குமார், 51, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.