மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் காவலர் குடியிருப்பு அருகே, கிருஷ்ணர் கோவில் வீதி உள்ளது. கடந்த மாதம் இந்த வீதிக்கு, புதிதாக தார் ரோடு போடப்பட்டது. அப்போது, சாலையின் ஒரு பக்கம் உள்ள வீடுகளின் முன்பு, சாக்கடை அமைக்க குழி தோண்டப்பட்டது.குழி தோண்டி ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும், இன்னும் சாக்கடை கட்டப்படவில்லை. இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'வீடுகளின் முன், சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் இருப்பதால், வீட்டிலிருந்து வெளியே வர சிரமமாக உள்ளது. குழந்தைகள், முதியவர்கள் குழிக்குள் விழும் அபாயம் உள்ளது. உடனடியாக, சாக்கடைக் கால்வாய் கட்ட, நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்' என்றனர்.