மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதியில் ஊரடங்கில் தடையை மீறி இறைச்சி செய்தவர்களுக்கும், முகக்கவசம் அணியாமல் ஊர் சுற்றியவர்களுக்கும் மொத்தம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஊரடங்கு உத்தரவை மீறி, சில இறைச்சி கடை வியாபாரிகள், மறைமுகமாக கடைகளைத் திறந்து, இறைச்சி விற்பனை செய்து கொண்டிருந்தனர். மேட்டுப்பாளையம் தாசில்தார் ரமேஷ் தலைமையில் வருவாய்த் துறையினர், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு, ஊரடங்கு தடையை மீறி இறைச்சி விற்பனை செய்த எட்டு கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, அபராதம் விதித்தனர்.அதேபோன்று முகக்கவசம் இல்லாமல் வெளியே சுற்றிய நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.இதில், வருவாய்த்துறையினர் சார்பில், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.போலீசார் அபராதம் அதேபோன்று, சிறுமுகையில் ஊரடங்கு நாளில், தடையை மீறி வெளியே சுற்றியவர்களுக்கும், முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கும், போலீசார், 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.வாகன சோதனையில், முகக்கவசம் அணியாத 30 நபர்கள், தேவையின்றி வெளியில் சுற்றிய 15 பேர், ஹெல்மெட் அணியாமல் வந்த, 25 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தமாக, 70 பேரிடம், 15 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டது.