செய்திகள் சில வரிகளில்: உடைந்த இருக்கையால் அவதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2022
23:08

உடுமலை அருகே, துங்காவியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தாராபுரம்- உடுமலை மற்றும் பூளவாடி வழியாக ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகிறது.துங்காவி பஸ் ஸ்டாப் பகுதியில், நிழற்கூரை இல்லாத நிலையில், மரத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் பொதுமக்கள் காத்திருந்து பஸ் ஏறி வந்தனர்.


இந்நிலையில், அந்த கான்கிரீட் இருக்கையும் உடைந்து, பஸ் ஸ்டாப்பில் ஆபத்தான நிலையில் உள்ளது.இதனால், பொதுமக்கள் கால் கடுக்க காத்திருந்து, பஸ் ஏற வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, துங்காவியில் பஸ் ஸ்டாப் நிழற்கூரை அமைக்கவும், இருக்கை வசதி செய்து தரவும் வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.ஆபத்தான நிலையில் மின் கம்பம்எந்நேரமும் விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை அருகேயுள்ள பெரியவாளவாடி, சிவன் கோவில் அருகே, உடைந்து, எந்நேரமும் விழும் நிலையில், ஆபத்தான முறையில் மின் கம்பம் உள்ளது.
இதனால், அருகிலுள்ள வீடுகள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கும் நிலை உள்ளது.அந்த வழியாக பொதுமக்களும், பக்தர்களும் அச்சத்துடன் செல்ல வேண்டியதுள்ளது. எனவே, மின் வாரியத்தினர் உடனடியாக, இதனை அகற்றி விட்டு, புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.விதிகளை மீறி இறைச்சி விற்பனை கொரோனா பரவலை தடுக்க, தமிழக அரசு, ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு விதித்துள்ளது. அனைத்து கடைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டி ஊராட்சி, பெதப்பம்பட்டியில், அரசு உத்தரவை மீறி, இறைச்சி கடைகள் செயல்படுவதாக, போலீசாருக்கும், சுகாதாரத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, சம்பவ இடத்துக்குச்சென்ற, குடிமங்கலம் போலீசார், செஞ்சேரிமலை ரோட்டில், விதிகளை மீறி, இறைச்சி விற்பனை செய்து கொண்டிருந்த, ஐந்துக்கும் மேற்பட்ட கடையினருக்கு அபராதம் விதித்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த புகாருக்கு, வட்டார சுகாதாரத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.ஒற்றை யானையால் பீதியில் மக்கள்வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. இந்நிலையில், வால்பாறை நகரில் முகாமிட்ட ஒற்றை யானை, கோ - ஆப்ரேட்டிவ் காலனி, பி.எஸ்.என்.எல்., குடியிருப்பு பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் முகாமிட்டு, தடுப்புச்சுவரை இடித்து, வாழை மரங்களை உட்கொண்டது.பி.ஏ.பி., காலனியில் நேற்று அதிகாலை முகாமிட்ட ஒற்றை யானையை கண்டு, பீதியடைந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
பொதுமக்கள் சப்தமிட்டதை தொடர்ந்து, யானை அங்கிருந்து, புதுத்தோட்டம் வனப்பகுதிக்குள் சென்றது. ஒற்றை யானை, மூன்றாவது நாளாக வால்பாறை நகரில் முகாமிட்டதால், உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் அச்சத்தில் உள்ளனர்.பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்துங்க!வால்பாறையில், அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், பணிமனையுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் உள்ளது. ஆனால், நகரை விட்டு ஒதுக்குப்புறமாக பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளதாலும், தேவையான அடிப்படை வசதி இல்லாததாலும், பயணிகள் பஸ் ஸ்டாண்டை பயன்படுத்த தயக்கம் காட்டினர்.
இதனையடுத்து, காந்திசிலை வளாகம் தற்காலிக பஸ் ஸ்டாண்டாக மாற்றப்பட்டது. வெளியூர் செல்லும் பஸ்கள் அரசு போக்குவரத்து கழக பஸ் ஸ்டாண்டில் இருந்தும், எஸ்டேட் பகுதிக்கு இயக்கப்படும் பஸ்கள் காந்திசிலையில் இருந்தும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், காந்திசிலை வளாகத்தை சுற்றிலும், ஆக்கிரமிப்பு கடைகளும், ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ் வந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், காந்தி சிலை வளாகத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி, பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்த வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.கல்வி மையத்தில் பொங்கல் விழாஉடுமலை அடுத்த ராகல்பாவி ஊராட்சிக்கு உட்பட்ட இல்லம் தேடி கல்வி மையத்தில், கல்வி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., அலுவலர் சரவணன், தலைமை வகித்தார்.இதையடுத்து, குழந்தைகளுக்கு பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவம், பாரம்பரிய விழாக்கள் கொண்டாடுவதற்கான காரணம் குறித்து விளக்கிப்பேசினார். ஆசிரியர் கண்ணபிரான், இல்லம் தேடி கல்வி மைய செயல்பாடு மற்றும் கற்றலின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.தன்னார்வலர்கள் வீரலட்சுமி, ஸ்ரீநதி, கோகுலப்பிரியா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.வேளாண் மாணவிகள் ஆய்வுபொள்ளாச்சி, மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவிகளின் கிராம தங்கல் திட்டம், சொக்கனுார் ஊராட்சிக்கு உட்பட்ட, 8 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் முன்னோடி விவசாயிகள், வேளாண் சார்ந்த துறைகளுக்கு நேரில் சென்று, தகவல் சேகரித்து வருகின்றனர்.பெரும்பதியில் செயல்படும் சொக்கனுார் பசுமைக்குடில் விவசாயிகள் மற்றும் தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தை பார்வையிட்டனர்.இந்நிறுவனத்தின் தலைவர் திருவேங்கடம், பசுமைக்குடில் நிறுவனத்தின் செயல்பாடுகள், இதனை சார்ந்துள்ள ஆயில் உற்பத்தி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் ஆகியவற்றின் தரம், விற்பனை, தேவையான மூலப்பொருள்கள் கொள்முதல் ஆகியன குறித்து விளக்கினார்.
மேலும், இச்சங்கத்துக்கு தொழில்நுட்ப உதவிகளை வாணவராயர் வேளாண் கல்வி நிறுவனமும், தேவையான கடன் உதவியை நபார்டு வங்கியும் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.'சில்லிங்' மது விற்பனை 'ஜோர்!' ஊரடங்கை பயன்படுத்தி, குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில், முறைகேடாக மது விற்பனை, ஜோராக நடந்தது.பெதப்பம்பட்டி, பெரியபட்டி, குடிமங்கலம், வீதம்பட்டி உட்பட இடங்களில், நேற்று காலை முதலே மது பாட்டில்களை வீட்டிலும், பிற இடங்களிலும், பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்தனர்.சில இடங்களில், ஆர்டர் அடிப்படையில், மதுபாட்டில்கள் டோர் டெலிவரி செய்யப்பட்ட அவல நிலையும் அரங்கேறியது.'டாஸ்மாக்' மதுக்கடைகள் செயல்படும் பகுதியிலேயே, அதிகளவு முறைகேடாக 'சில்லிங்' விற்பனையும் நடந்து வருகிறது.
ஊரடங்கு மற்றும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் நாட்களை குறிவைத்து, மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.அரசுக்கு வருவாய் இழப்பு உட்பட பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், 'கவனிப்பு' அடிப்படையில் குடிமங்கலம் போலீசாரும் நடவடிக்கை எடுப்பதில்லை.ஊரடங்கின் போதும், சில்லிங் மது விற்பனையால், நிம்மதியை தொலைப்பதாக, குடிமங்கலம் ஒன்றிய கிராம மக்கள் புலம்புகின்றனர்.அதிக பாரம்; பாதுகாப்பில்லா பயணம்பொள்ளாச்சி பகுதியில், சரக்கு ஆட்டோக்கள், டெம்போக்கள், கட்டுமானம், தென்னை நார் தொழில், தேங்காய் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. சரக்கு வாகனங்கள், பெரும்பாலும் சாலை விதிகளை காற்றில் பறக்க விடுவது தொடர்கதையாக உள்ளது.

கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் தேங்காய் பறிப்பு தொழிலாளர்களை விதிகளுக்கு புறம்பாக, பாதுகாப்பின்றி சரக்கு வாகனங்களில் ஏற்றி பயணிப்பதும், தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் வாகனங்கள், அளவுக்கு அதிகமாக தேங்காய் மட்டை, தென்னை நார், நார் கட்டி, கயிறு ஆகியவற்றை பாரம் வைத்து, பாதுகாப்பின்றி சாலைகளில் இயக்கி, பிற வாகன ஓட்டுனர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதும் தொடர்கதையாக உள்ளது.இதை, போக்குவரத்து போலீசாரும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் விடுவதால், விதிமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து, பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X