தொண்டி : தொண்டி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றுபவர் செல்லத்துரை. இவரும் ஊர்க்காவல்படையை சேர்ந்த பெண் கரோலின்சூர்யா மற்றும் கார்த்திக்ராஜா ஆகியோர் பொங்கலை முன்னிட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாவோடி மைதானத்தில் நின்று கொண்டிருந்த சிலரை கலைந்து செல்லுமாறு கூறினர். இதில் புதுக்குடி லட்சுமணன் 27, என்பவர் ஊர்க்காவல் படையினரை பார்த்து கொலை செய்து விடுவேன் எனக் கூறி பணி செய்யவிடாமல் தடுத்தார். தொண்டி போலீசார் லட்சுமணனை கைது செய்தனர்.