முதுகுளத்துார் : முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் புத்தகம், தளவாட பொருட்கள் மற்றும் கொரோனா காலத்தில் ஆதரவற்றவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர்.இந்நிலையில் விளங்குளத்துார் பசும்குடில் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூ.40ஆயிரம் செலவில் உப்பு தண்ணீரை நன்னீராக்கும் ஆர்.ஓ. பிளான்ட் அமைத்து கொடுத்தனர். ஏற்பாடு செய்த அப்துல்ரகுமான், அரவிந்த், சரவணன், பாலமுருகன்,தீபக், கனி, பிரசாத், விநாயகம், பெரியசாமி ஆகியோருக்கு பசும்குடில் செயலாளர் சின்னமருதுமற்றும் குழந்தைகள் நன்றி தெரிவித்தனர்.