ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வலியுறுத்தல் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வலியுறுத்தல்
Added : ஜன 16, 2022 | |
Advertisement
 

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஆர்.எஸ்.மங்கலம் நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப்பகுதியாக திகழ்கிறது.இங்குள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இப்பகுதி கிராமத்தினர் சிகிச்சைக்காக வந்து செல்லும் நிலை உள்ளது. இங்கு எக்ஸ்ரே, அறுவை சிகிச்சை பிரிவு, உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிகிச்சைக்கு ராமநாதபுரம் அல்லது மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. பிரசவம் உள்ளிட்டவைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஆப்பரேஷன் தியேட்டர் இல்லை.தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X