தொண்டி : தொண்டி அருகே கபடி போட்டியில் ஏற்பட்ட தகராறில் அரிவாளால் வெட்டியதில் 12 பேர் காயமடைந்தனர்.
புதுக்குடியில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நேற்று கபடி போட்டி நடந்தது. போட்டி நடந்து கொண்டிருக்கும் போது அதே கிராமத்தை சேர்ந்த சக்தி, முனிஸ்வரன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இரு ஆதரவாளர்களும் அரிவாள், கம்பியால் தாக்கி மோதிக்கொண்டனர்.சக்தி தரப்பில் சக்தி, காளிமுத்து, மணிகண்டன், கலைசெல்வி, சகாதேவன், கமலேஷ் ஆகியோரும், முனிஸ்வரன் தரப்பில் நல்லேந்திரன், மகேந்திரன்,கஜேந்திரன், ஜானகி, நாகவள்ளி, பஞ்சவர்ணம் ஆகியோரும் காயம்அடைந்தனர். தொண்டி போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குபதிவு செய்துள்ளனர்.