இடியும் நிலையில் இரட்டை பால நடைபாதை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2022
00:56

காவு வாங்குவதற்குள் நடவடிக்கை தேவை

காவு வாங்கி விடுமோதினமும் பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தும், சிவானந்தா காலனி பை பாஸ் சாலையின், இரட்டை பாலத்தின் கான்கிரீட் நடைபாதை, இடிந்து விழும் நிலையில் உள்ளது. காவு வாங்குவதற்குள் துரித நடவடிக்கை தேவை.- கோபாலகிருஷ்ணன், கோவை

டெங்கு பரவும் அபாயம்கோவை ரயில்நிலையம் எதிரில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கி அருகில், பல மாதங்களாக மழைநீர் தேங்கிய நிலையில் உள்ளது. இதனால், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதோடு, டெங்கு பரவும் அபாயமும் உள்ளது.- வீரமணி, கோவை

போக்குவரத்துக்கு இடையூறுஆர்.எஸ்.புரம் வி.வி.சி.லே அவுட் சாலையில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தியுள்ளனர். கட்டட கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளதால், மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.- முரளிதரன், ஆர்.எஸ்.புரம்.

வாகன ஓட்டிகள் அச்சம்மேட்டுப்பாளையம் ரோடு, ஜி.என்.மில்ஸ் ஜங்ஷன் பகுதியில், குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலையில், ஒவ்வொரு நாளும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனே பயணித்து வருகின்றனர்.- வெங்கட்நாராயணன், கோவை.

குடிநீர் பிரச்னைமீனா எஸ்டேட், 6வது கிராஸ், எல்.ஜி.நகர் பகுதிக்கு, குடிநீர் விநியோகம் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன. சில சமயம், ஒரு மாதங்களாகியும் தண்ணீர் விநியோகிப்பதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால், சாக்கு போக்குதான் சொல்கின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.- ஆன்டனி, மீனா எஸ்டேட்

கம்பத்தால் நோ ப்ரீ லெப்ட்லட்சுமி மில்ஸ் சிக்னல், வாசன் ஐ கேர் மருத்துவமனை அருகில், மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தால், ப்ரீ லெப்ட் திரும்ப முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.- ஆறுமுகம், கோவை

விளக்கு எரியலைகணபதி மாநகர், தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்புகள், பிளாக் 2ல் அமைந்துள்ள, இந்த மின்கம்பத்தில் உள்ள விளக்கு கடந்த இரண்டு மாதங்களாக எரிவதில்லை. மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- முரளி, கணபதிமாநகர்

புதரால் பீதிநரசிம்மநாயக்கன்பாளையம், சூர்யா நகரில், குடியிருப்புகளுக்கு இடையில் உள்ள காலி இடத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது. இதனால், பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் தொந்தரவு அதிகரித்துள்ளது. பேரூராட்சி நிர்வாகம், நிலத்தின் உரிமையாளரிடம் பேசி புதரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மனோகர், சூர்யா நகர்

தேங்கிய சாக்கடைசூலுார், பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் சாக்கடை ஒன்று பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால், கழிவுகள் நிறைந்து, தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி உள்ளது. துர்நாற்றம், கொசுத்தொல்லை அதிகரித்து விட்டது.- ஜீவா, சூலுார்

குப்பை தொட்டி இடமாற்றணும்ஒண்டிப்புதுார், காந்திநகர், பொதுக்கழிப்பிடம் முன்பு உள்ள குப்பைத் தொட்டி முறையாக பராமரிக்கப்படுவதில்லை. சுற்றிலும் குப்பை வீசிச் செல்வதால், துர்நாற்றத்தால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்படுகின்றனர். குப்பை தொட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.- நாகராஜ், ஒண்டிப்புதுார்

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X