தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களுக்கு, வருவாய்த்துறையினர் அபராதம் விதித்தனர்.ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், பால், மருந்து கடைகள்மட்டும் திறக்கப்பட்டன. ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களை தடுக்க, போலீசார் பல இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணித்து வந்தனர். தொண்டாமுத்தூர், வடவள்ளி பகுதியில், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து கண்காணித்து வந்தனர். விதிகளை மீறி, முக கவசம் அணியாமல் சென்றவர்களிடம், 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.