தன்னிறைவை நோக்கி தண்ணீர் வினியோகம்: நிலத்தடி நீரை உறிஞ்ச வேண்டாம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
தன்னிறைவை நோக்கி தண்ணீர் வினியோகம்: நிலத்தடி நீரை உறிஞ்ச வேண்டாம்
Added : ஜன 17, 2022 | |
Advertisement
 
Latest district News

அவிநாசி;அவிநாசியில், நான்காவது கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் சீரான தண்ணீர் வினியோகம் செய்யப்படும் நிலையில், 'போர்வெல்' பயன்பாடு குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.மேட்டுப்பாளையம், பவானி நீரை மையமாக வைத்து, இரண்டாம் மற்றும் மூன்றாம் குடிநீர் திட்டங்களின் கீழ், அவிநாசி பேரூராட்சி பகுதிக்கு, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.இருப்பினும், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நிர்ணயிக்கப்பட்ட அளவு தண்ணீர் வினியோகிக்கப்படாததால், மக்கள் திண்டாடினர். 10 முதல், 15 நாள் இடைவெளியில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டதால், தண்ணீருக்கு மக்கள் தவித்தனர்.தற்போது அன்னுார், அவிநாசி, மோப்பிரிபாளையம் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி புதிய கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், தண்ணீர் வினியோகம் துவங்கியுள்ளது. 3 முதல், 5 நாள் இடைவெளியில் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது; தண்ணீர் தேவை பூர்த்தியாகியுள்ளது.முந்தைய நாட்களில் போதியளவு தண்ணீர் கிடைக்காததால், மக்கள் தங்கள் வீடுகளின் முன் ஆழ்துளை கிணறு (போர்வெல்) தோண்டி தண்ணீர் பெற்றனர். அதிகபட்சம், 600 முதல், 800 அடி ஆழம் வரை ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள 'போர்வெல்'லில் இருந்து, நிலத்தடி நீரை பெற்று பயன்படுத்தினர். போதியளவு ஆற்றுநீர் வினியோகம் இல்லாததால், பேரூராட்சி சார்பில், ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள 'போர்வெல்'லில் இருந்து, கூடுதலாக தண்ணீர் வினியோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குடியிருப்புவாசிகள், சில அடி இடைவெளியில் அடுத்தடுத்து 'போர்வெல்' தோண்டப்பட்டதாலும், கூடுதலாக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டதாலும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.இந்நிலையில், நான்காவது கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் வினியோகம் துவங்கியுள்ள நிலையில், மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகியுள்ளது.எனவே, வரும் நாட்களில் 'போர்வெல்' தோண்டி, நிலத்தடி நீரை உறிஞ்சும் செயல் குறைக்கப்பட வேண்டும்; தவிர்க்கப்பட வேண்டும். அதன் மூலம், நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தப்பட வேண்டும். அப்போது தான், புதிய குடிநீர் திட்டங்களின் பயன், அர்த்தம் நிறைந்ததாக இருக்கும்.பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'தற்போது, இரண்டாவது குடிநீர் திட்டத்தில் இருந்து, தொடர்ச்சியாக தண்ணீர் பெறாமல், தேவைக்கு மட்டும் தண்ணீர் பெறப்படுகிறது. தற்போது சீரான இடைவெளியில் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.பவானி ஆற்றின் சிறுமுகை சுமைதாங்கி பகுதியில் இருந்த தண்ணீர் பெறப்படும் நிலையில், கோடையின் போது அங்கு வறட்சி ஏற்பட்டால், வினியோகம் பாதிக்கும். எனவே, வீணடிக்காமல் தண்ணீரை பயன்படுத்த வேண்டும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X