திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையொட்டி, 10 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்தது.நேற்று முன்தினம் திருவள்ளுவர் தினம், நேற்று முழு ஊரடங்கு என்பதால், பொங்கல் பண்டிகையான 14ம் தேதி மது விற்பனை அதிகமாக இருந்தது. தொடர் விடுமுறை என்பதால், மதுபிரியர்கள் தாங்கள் விரும்பிய மது வகைகளை பெட்டி, பெட்டியாக வாங்கி சென்றனர். மாவட்டத்தில் உள்ள, 258 'டாஸ்மாக்' மதுக்கடைகளில், நாளொன்றுக்கு, 6.5 கோடி ரூபாய் வரை விற்பனை நடக்கும். இருநாட்கள் விடுமுறை காரணமாக, பொங்கல் பண்டிகையன்று, 10 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.