பல்லடம் போலீசார் 6 பேருக்கு தொற்று | திருப்பூர் செய்திகள் | Dinamalar
பல்லடம் போலீசார் 6 பேருக்கு தொற்று
Added : ஜன 17, 2022 | |
Advertisement
 

பல்லடம்:பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசார் ஆறு பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகளை தொடர்ந்து, நடப்பாண்டு மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் ஏட்டு, மற்றும் தலைமை காவலர்கள் என, ஆறு பேர், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.போலீசார் கூறுகையில், 'பல்லடம் போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் ஏட்டு ஒருவர் உட்பட, 6 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், 5 பேர் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ள நிலையில், தொற்று உறுதி ஆனதால், அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல், பல்லடத்தை சேர்ந்த ஏட்டு ஒருவர், இங்கேயே தனிமையில் உள்ளார். போதிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X