கொரோனா சோதனை அவசியம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
கொரோனா சோதனை அவசியம்
Added : ஜன 17, 2022 | |
Advertisement
 

திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில், மூன்று துணை தாசில்தார்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. பரிசோதனை முடிவு தெரிய, ஐந்து நாட்கள் வரை தாமதம் ஏற்பட்டுள்ளதால், முடிவு தெரியும் வரை பொறுமை காக்காமல், பணிக்கு வந்துள்ளனர். கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், அரசு விழாக்களில் பங்கேற்றுள்ளனர். பொங்கல் பரிசு பொருள் வினியோகத்தை கவனிக்க, ரேஷன் கடைகளுக்கு சென்றும், பொதுமக்களை சந்தித்துள்ளனர்.''தெற்கு தாலுகா அலுவலகத்தில், மூன்று பேருக்கு தொற்று பரவியுள்ளதால், அங்குள்ள அனைவருக்கும், தொடர்பில் இருந்த அலுவலருக்கும், கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம், சிறப்பு ஏற்பாடு செய்து, விரைவில் முடிவு கிடைக்க ஆவன செய்ய வேண்டும்'' என்பது, அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X