திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொது இடங்களில், கூட்டம் சேர வேண்டாமென, அரசு தரப்பு வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், உழவர் சந்தை, தினசரி மார்க்கெட், தென்னம்பாளையம் மார்க்கெட்டுகளில், கூட்டம் அலைமோதுகிறது. பெரும்பாலானோர், முககவசம் அணிவதில்லை; சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மார்க்கெட்களில் கூட்டம் சேராதபடி, தடுப்பு நடவடிக்கை மிக அவசியம். எனவே, கொரோனாவை கட்டுப்படுத்த, நோய் தடுப்பு நடவடிக்கையை மேலும் முடுக்கிவிட வேண்டும் என்பது, மக்களின் எதிர்பார்ப்பு.