கடந்தாண்டு பொங்கல் (ஜன., 14), மாட்டுப்பொங்கல் (ஜன., 15) நாளில் திருப்பூர் வடக்கு உழவர் சந்தைக்கு, 8.54 லட்சம் மற்றும் 6.80 லட்சம் என, 14.34 லட்சம் ரூபாய்க்கு காய்கறி வர்த்தகம் நடந்தது; இரு நாட்களில், 44 டன் காய்கறி விற்றது. இந்தாண்டு பொங்கல், மாட்டுப்பொங்கல் நாளில் முறையே, 7.21 லட்சம், 4.86 லட்சம் என, 12.07 லட்சம் ரூபாய்க்கு காய்கறி வர்த்தகம் நடந்தது; கடந்தாண்டு, 44 டன்னாக இருந்த பொங்கல் நாட்களின் காய்கறி வரத்து, நடப்பாண்டு, 27 டன்னாக குறைந்து விட்டது.கடந்த ஆண்டு ஜன., 14, 15 ம் தேதி, தெற்கு உழவர் சந்தையில், 78 டன் காய்கறி, 27 லட்சத்துக்கு விற்கப்பட்டது. நடப்பாண்டு காய்கறி வரத்து குறைந்து, 69 டன் காய்கறி, 24.64 லட்சத்துக்கு விற்றுள்ளது. உழவர் சந்தை அலுவலர்கள் கூறுகையில், 'ஞாயிறு முழு ஊரடங்கு; உழவர் சந்தை விடுமுறை என்பதால், முந்தைய நாள் (மாட்டுப்பொங்கல்) காய்கறி பறிப்பு, வரத்து குறைவு'' என்றனர்.