பரபரப்பை இழந்த ரயில் நிலையம்  | திருப்பூர் செய்திகள் | Dinamalar
பரபரப்பை இழந்த ரயில் நிலையம் 
Added : ஜன 17, 2022 | |
Advertisement
 

திருப்பூர்:பொங்கல் விடுமுறை, முழு ஊரடங்கு காரணமாக, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பார்ம் வெறிச்சோடி காணப்பட்டது.கடந்த, 12ம் தேதி முதல் நான்கு நாட்களாக திருப்பூர் வழியாக செல்லும் ரயில்களில் கூட்டம் நிறைந்தது. சென்னை, சேலம், பாலக்காடு மார்க்கமாக திருப்பூர் வந்த ரயில்களில் பலர்வந்திறங்கினர்.நேற்று முன்தினம் இரவு, வடமாநிலம் செல்லும் ரயில்களில், பயணம் செய்ய, 4,000 பேர் காத்திருந்தனர். இரவோடு இரவாக பலரும் பயணித்தனர். கடந்த வாரம் முழுஊரடங்கு என்பதை அறியாமல், பலரும் பயணித்து ரயில்வே ஸ்டேஷன் விட்டு இறங்கி வீடுகளுக்கு செல்ல சிரமப்பட்டனர். இந்த வாரம், பொங்கலை முன்னிட்டு பலரும் முன்கூட்டியே வெளியூர் சென்றதால், நேற்று எதிர்பார்த்த கூட்டமில்லை. நடப்பு முன்பதிவு மையத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய பொதுமக்கள் மட்டுமே இருந்தனர்.முதல் பிளாட்பார்ம் கண்ணுக்கு எட்டிய துாரம் வரை பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வடமாநிலங்களுக்கு நீண்ட துாரம் செல்லும் ரயில்களில் ஏற இரண்டாவது பிளாட்பார்மில் சிலர் காத்திருந்தனர். வழக்கமாக ஞாயிறு தினத்தன்று இருக்கும் பயணிகள் கூட்டம் நேற்று பகலில் இல்லை.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X