திருமுருகநாத சுவாமி கோவிலில் ஓய்வறைக்கு எதற்கு 'ஓய்வு?' | திருப்பூர் செய்திகள் | Dinamalar
திருமுருகநாத சுவாமி கோவிலில் ஓய்வறைக்கு எதற்கு 'ஓய்வு?'
Added : ஜன 17, 2022 | |
Advertisement
 

அனுப்பர்பாளையம்:திருமுருகன்பூண்டியில் புகழ்பெற்ற திருமுருகநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள தீர்த்த கிணற்றில் குளித்தால் மனநலம் சுகமாகும் என்பது ஐதீகம்.இதனால் இக்கோவிலுக்கு பல ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக சாமி தரிசனம் முடிந்த பிறகு பக்தர்கள் அமர்ந்து உணவு உண்பதற்காகவும், ஓய்வெடுக்கும் அறநிலையத்துறை சார்பில், ஓய்வறை கட்டப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தினர் ஓய்வு அறைக்கு பூட்டு போட்டுள்ளனர். கோவில் பணியாளர்கள் தங்கள் தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஓய்வறையை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பக்தர்கள் மண் தரையில் அமர்ந்து சாப்பிடுகின்றனர்; மரநிழலில் ஓய்வு எடுத்து செல்கின்றனர்.''பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் ஓய்வு அறையை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கின்றனர் பக்தர்கள்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X