திருப்பூர்:ரோட்டில் நடுவில் உருவாகியுள்ள மெகா குழியால், அடிக்கடி விபத்து நடக்கிறது.திருப்பூர் - பி.என்., ரோட்டில் தினம் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவருகின்றன. இந்த ரோட்டில், மில்லர் ஸ்டாப் பகுதியில், நடுரோட்டில் மெகா குழி உருவாகியுள்ளது.மேட்டுப்பாளையத்தில் ரோடு தாழ்வாகவும், மில்லர் ஸ்டாப்பில் உயரமாகவும் அமைந்துள்ளது.அதனால், வாகன ஓட்டிகளுக்கு ரோட்டில் உள்ள குழி தெரிவதில்லை. வாகனங்களை தவறி குழிக்குள் இறக்கி, நிலை தடுமாறி விழுகின்றனர். மேட்டுப்பாளையம் முதல் புஷ்பா தியேட்டர் வரை ரோடு ஒருவழிச்சாலையாக உள்ளது. குழியால் ரோடு குறுகலாகி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகிறது.வாகன போக்குவரத்து மிகுந்த பி.என்., ரோட்டில், மையப்பகுதியில் உள்ள குழியை மூடவேண்டும்; பேட்ஜ் ஒர்க் பணி மேற்கொள்ளவேண்டும்.