திருப்பூர்:இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) சார்பில் தை அமாவாசை சிறப்பு ரயில் இயக்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும், 22 ம் தேதி மதுரையில் புறப்படும் ரயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், ஜோலார்பேட்டை, சென்னை வழியாக வடமாநிலத்துக்கு பயணிக்கிறது.காளிதேவி, காமாக்யா தேவி, காசிவிசாலாட்சி, கயா, அலகாபாத், பூரி மற்றும் சக்தி பீடங்களுக்கு செல்கிறது. தை அமாவாசை நாளில் கயாவில் இந்த ரயில் இருக்கும். 13 நாட்கள் கொண்ட இந்த ரயில் யாத்திரைக்கு பயணி ஒருவருக்கு கட்டணம், 12 ஆயிரத்து, 285 ரூபாய். உணவு, தங்குமிடம், ரயில், உள்ளூர் போக்குவரத்து ஆகியவை இலவசம்.வாரந்தோறும் திருப்பதிக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஏ.சி., இருக்கைக்கு, 4,600 ரூபாயும், சாதாரண இருக்கைக்கு, 3,330 ரூபாயும் கட்டணம். பயணிக்க விரும்புவோர் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு, சான்றிதழை காட்ட வேண்டியிருப்பது அவசியம்.மேலும் விபரங்களுக்கு 9003140655 என்ற எண்ணில் அழைக்கலாம். www.irctctourisam.com என்ற இணையதளத்தில் விபரங்களை அறியலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.