திருப்பூர்:திருப்பூர் காம்பாக்டிங் சங்க செயலாளர் ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:பஞ்சு, நுால் விலை உயர்வால், ஜவுளித்துறை தத்தளித்துவருகிறது. மத்திய அரசு, பஞ்சு ஏற்றுமதிக்கு உடனடியாக தடைவிதித்து, நுால் விலையை கட்டுப்படுத்த வேண்டும். இந்திய பருத்தி கழகம் மூலம் கொள்முதல் செய்து, குறு, சிறு, நடுத்தர ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆண்டு முழுவதும் சீரான விலைக்கு நுால் கிடைக்கச்செய்யவேண்டும்.நுால் விலையை கட்டுப்படுத்தக்கோரி திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், இரண்டு நாட்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இப்போராட்டத்துக்கு ஆதரவு அளித்து, நிட் காம்பேக்டர்ஸ் அசோசியேஷனும் பங்கேற்கிறது.