திருப்பூர்:நேற்று முழு ஊரடங்கு என்பதால், நேற்று முன்தினம் மீன் மார்க்கெட்டில் விற்பனை சூடு பறந்தது. ஒரே நாள் இரவில், 60 டன் மீன் விற்றுத்தீர்ந்தது.வழக்கமாக, ஞாயிறு விற்பனைக்கு வரும், 80 டன் மீன்கள் ஒருநாள் முன்கூட்டியே சனிக்கிழமை விற்பனைக்கு வந்தது. வஞ்சிரம், 800 ரூபாய், நெய் மீன், 110, மத்தி, 150, கட்லா, 170, பாறை, 130, இறால் முதல்ரகம், 250, பெரியது, 400, விளாமீன், 400, சங்கரா, 250 ரூபாய், வாவல், 700 ரூபாயாக இருந்தது.வழக்கமாக ஞாயிறு மீன் வாங்க வருவோர் ஒரு நாள் முன்கூட்டியே சனிக்கிழமை மீன் வாங்க வந்தனர். இறைச்சி கடைகள் நேற்றுமுன்தினம் பகலில் விடுமுறை விடப்பட்டிருந்தாலும், இரவில் பல இடங்களில் செயல்பட்டதால், இறைச்சி விற்பனையும் சூடுபிடித்தது.