அவிநாசி:தேசிய நெடுஞ்சாலையோரங்களில் எரியூட்டப்படும் குப்பையால், வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.கோவை -- சேலம் பைபாஸ் ரோட்டில், பழங்கரை, அவிநாசி, தெக்கலுார் உள்ளிட்ட இடங்களில் சர்வீஸ் ரோட்டோரம் பலரும் குப்பை கழிவுகளை கொட்டுகின்றனர். சில நேரங்களில் அவை எரியூட்டப்படுவதால், புகை பரவுகிறது.அதே நேரம் காற்றும் வீசுவதால், புகை சாலை முழுக்க பரவுகிறது. இதனால், சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கிராம ஊராட்சி நிர்வாகங்களே பல நேரங்களில் தங்கள் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகளை, ரோட்டோரம் கொட்டி, எரியூட்டுகின்றன. இதுபோன்ற செயல்களை தவிர்க்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.