வெள்ளகோவில்:நத்தக்காடையூர், சோளிமடையில் வசிப்பவர் செல்வராஜ்.43. தனது வீட்டு அருகே சாராய ஊறல் போட்டு வைத்து சாராய விற்பனை செய்வதற்காக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கத்துறை இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை, எஸ்.ஐ., முரளிதரன் உள்ளிட்டோர் அங்கு ரெய்டு நடத்தினர். செல்வராஜை கைது செய்து வீடு அருகே, அலுமினிய பாத்திரத்தில் மறைத்து வைத்திருந்த 5 லிட்டர் ஊறலை அழித்தனர்.