பொங்கலுார்:பொங்கலுார் ஒன்றியம் வாவிபாளையம் ஊராட்சி கொசவம்பாளையத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன், 55; தேங்காய் வியாபாரி. இவரது மகள் கவிதா. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. மகேந்திரன் டிரைவர் வேலை பார்க்கிறார். தம்பதியருக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.இது சம்பந்தமாக பேசுவதற்கு நேற்று காலை மகேந்திரன் மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். இதில் தகராறு ஏற்பட்டு உள்ளது. தகராறு முற்றிய நிலையில் மகேந்திரன் அரிவாளால் மாமனார் கழுத்தை வெட்டியுள்ளார். பின்னர் சுதாரித்த லட்சுமணன் மருமகனை தாக்கியுள்ளார். காமநாயக்கன்பாளையம் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.