திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் தொற்றில் இருந்து மீண்டு, நலம் பெறுவோரின் எண்ணிக்கை நேற்று உயர்ந்தது. 187 நாட்களுக்கு பின் 'டிஸ்சார்ஜ்', 200ஐ கடந்து பதிவாகியுள்ளது.நேற்று புதிதாக மேலும், 619 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று நிலவரப்படி, மாவட்டத்தின் மொத்த தொற்று பாதிப்பு, ஒரு லட்சத்து, 2,406 ஆக உயர்ந்துள்ளது. கடந்த பத்து நாட்களாக பாதிப்பு வேகமெடுத்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை உயர்ந்தது.நேற்று, 212 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். கடந்தாண்டு ஜூலை 12ம் தேதி, 228 பேர் நலம் அடைந்து வீடு திரும்பினர். 187 நாட்களுக்கு பின், சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை, 200ஐ கடந்து பதிவாகியுள்ளது.மாவட்டத்தில், இதுவரை, 98 ஆயிரத்து, 487 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தை சேர்ந்த, 2,888 பேர் பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்; நேற்று இறப்பு இல்லை.இதுவரை மாவட்டத்தை சேர்ந்த, 1,031 பேர் தொற்றால் இறந்துள்ளனர்.