கிலோ ரூ.200 உயர்ந்த நூல் விலை | திருப்பூர் செய்திகள் | Dinamalar
கிலோ ரூ.200 உயர்ந்த நூல் விலை
Added : ஜன 17, 2022 | |
Advertisement
 

திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை துறையினர் இன்றும், நாளையும் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது:நுால் விலை உயர்வு, திருப்பூர் பின்னலாடை துறையை மிகவும் பாதிப்படையச் செய்துள்ளது. கடந்த 2020 அக்டோபர் முதல் இம்மாதம் வரையிலான 15 மாதங்களில், கிலோவுக்கு 190 முதல் 200 ரூபாய் வரை நுால் விலை உயர்ந்துள்ளது. கிலோ 230 ரூபாயாக இருந்த 40ம் நம்பர் ஒசைரி நுால், தற்போது 400 ரூபாயாக உள்ளது.நுால் விலையின் இந்த போக்கு, ஒட்டுமொத்த ஜவுளித்துறையையும், சீர்குலைத்துவிடும். தொழிலை பாதுகாக்கவேண்டி, மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, இரண்டு நாட்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு, பருத்தி பஞ்சு இறக்குமதிக்கு விதிக்கப்படும் 11 சதவீத வரியை ரத்து செய்யவேண்டும். பஞ்சு, நுால், துணி ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதிக்கவேண்டும். இதுகுறித்து மத்திய அமைச்சர்களுக்கு தொடர்ந்து கடிதம் அனுப்பிவருகிறோம். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ்கோயலை நேரில் சந்தித்து முறையிடவும், முயற்சித்து வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X