பந்தலுார்:பந்தலுார் வனப்பகுதியில் பூத்துள்ள 'குளோக்சினியாக பேரனீஸ்' மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் அரிய வகை தாவரங்கள் வளர ஏற்ற காலநிலை நிலவுகிறது. இதனால், இங்குள்ள வனப்பகுதிகளில்,வளரக்கூடிய மூலிகை செடிகள்; மலர்கள் பல்வேறு மருத்துவ பயன்களுக்கும்; ஆராய்ச்சிக்கும் பயன்படுகிறது.இந்நிலையில், மத்திய மற்றும் தென் அமெரிக்கா, கொலம்பியா, பிரேசில் ஆகிய நாடுகளில் அதிகளவில் காணப்படும் 'குளோக்சினா' குடும்பத்தை சார்ந்த, 'குளோக்சினியா பேரனீஸ்' வகை மலர்கள், மாநில எல்லையில் உள்ள, கிளன்ராக் வனப்பகுதியில் பூத்து குலுங்குகிறது. பசுமையான வனத்தில், ஊதா நிறத்தில் சாலையோரம் காணப்படும் மலர்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.