கொரோனா சிகிச்சைக்கு 1065 படுக்கை தயார் : தொற்றை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2022
02:57

ஊட்டி:நீலகிரியில், கொரோனா சிகிச்சைக்கு, 1,065 படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளது.நீலகிரியில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, மாநில அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு உள்ளன. 'கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, 536 சாதாரண படுக்கை, 453 ஆக்சிஜன் படுக்கை, 76 தீவிர சிகிச்சை படுக்கை,' என, மொத்தம், 1065 படுக்கைகள் அரசு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் தயார் நிலையில் உள்ளது.இதில், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, அறிகுறிகள் ஏதுமில்லாத, 355 நபர்கள் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தவிர, கலெக்டர் அலுவலகத்தில், 24 மணிநேரம் இயங்கும் மாவட்ட கட்டளை மையம் ஏற்படுத்தப்பட்டு, அங்கிருந்து வீட்டு தனிமையில் உள்ள நபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் ஆகியவை, பாதிக்கப்பட்ட இருப்பிடத்திற்கு கொண்டு சென்று வழங்கப்பட்டு வருகிறது. பேரூராட்சி, கிராம ஊராட்சி அலுவலகங்களிலும் கட்டளை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் கொரோனா பரவல் அதிகமுள்ள, 30 இடங்களில் கட்டுப்பாட்டு பகுதிகள் ஏற்படுத்தப்பட்டு அங்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கலெக்டர் அம்ரித் கூறுகையில்,''கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் தயார்நிலையில் உள்ளது. பொது இடத்தில் கட்டாயம் 'மாஸ்க்' அணிவது, சமூக இடைவெளி என, வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடித்து, மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் விதிமீறலில் ஈடுபட்டவர்களிடமிருந்து, 4.74 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X