பந்தலுார்:ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், கூடலுார், பந்தலுாரில், 157- அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இங்கு, குழந்தைகளுக்கு சத்து மாவு உருண்டை, சுடுதண்ணீர் மற்றும் சமையல் செய்வதற்காக, ஆண்டிற்கு மூன்று சமையல் சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. இதற்கான தொகையாக, 400 ரூபாய் வீதம், 1200 ரூபாய் மட்டுமே மொத்தமாக வழங்கப்படுகிறது.இதனால், அமைப்பாளர்கள் தங்கள் சம்பளத்திலிருந்து மீதமுள்ள தொகையை செலுத்துவதுடன், கிராமப்பகுதிகளில் உள்ளவர்கள் ஆட்டோ வாடகையும் வழங்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது. சிலிண்டருக்கான மொத்த தொகைக்கான பில்களை மட்டும் அலுவலகத்தில் பெற்று கொண்டு, மீதமுள்ள தொகையை தருவதில்லை.சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் தேவகுமாரி கூறுகையில், ''இதற்கான முழு தொகை வழங்க அரசு நிதி ஒதுக்கவில்லை. தொகை கேட்டுள்ளோம். வந்தவுடன் வழங்கப்படும்,'' என்றார்.