கோத்தகிரி:கோத்தகிரியில் ஊரடங்கு நேரத்தில், அதிக விலைக்கு மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.கோத்தகிரி கட்டபெட்டு பகுதியில், ஊரடங்கு விதிமீறல் குறித்து, எஸ்.ஐ., சேகர் தலைமையிலான போலீசார், ஆய்வு நடத்தினர். அப்போது, கட்டபெட்டு இன்கோ சந்திப்பில், ஒருவர் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தது தெரியவந்தது.போலீசார் விசாரணை செய்ததில், அவர் பில்லிக்கம்பையை சேர்ந்த ராமச்சந்திரன்,59; ஊரடங்கு நேரத்தில் டாஸ்மாக் கடையில் இருந்து, மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. ராமச்சந்திரன் வைத்திருந்த, 60 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.