கூடலுார்:மாநில எல்லையில், ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் செல்ல அனுமதிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, கர்நாடக பக்தர்கள், கூடலுார் வழியாக சென்று வருகின்றனர். அதன்படி, பொங்கலுக்கு முன், கோவிலுக்கு சென்ற, கர்நாடக ஐயப்ப பக்தர்கள், நேற்று, காலை ஊருக்கு செல்வதற்காக, வாகனங்களில் கூடலுார் நோக்கி வந்தனர்.நாடுகாணி சோதனை சாவடி பணியில் இருந்த போலீசார், முழு ஊரடங்கை காரணம் காட்டி, பக்தர்கள் வந்த வாகனங்களை செல்ல அனுமதி மறுத்தனர். இதனால், பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பின்பு, உயர் அதிகாரிகள் உத்தரவை தொடர்ந்து, வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதி அளித்தனர்.