கூடலுார்:தமிழக-கேரளா எல்லையான, கீழ்நாடுகாணி வரையிலான, 6 கி.மீ., சாலை மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. இதனால், அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது.குறிப்பாக, நாடுகாணி, வாகன நுழைவு வரி வசூல் மையம் அருகே, கடந்த மூன்று வாரத்தில் மூன்று வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்நிலையில், நேற்று, பிற்பகல், 3:00 மணிக்கு, கேரள மாநிலம் பெரம்பாவூரிலிருந்து, கர்நாடகாவுக்கு, 'பிளைவுட்' ஏற்றி செல்லும் லாரி, அதே இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.ஓட்டுனர்கள் கூறுகையில்,'அடிக்கடி, வாகன விபத்து நடைபெறும், இப்பகுதியை சீரமைக்க வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. மீண்டும் விபத்து ஏற்படும் முன், அப்பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து, சீரமைக்க வேண்டும்,' என்றனர்.