கடலுார் மாவட்டத்தில் ஊரடங்கு | கடலூர் செய்திகள் | Dinamalar
கடலுார் மாவட்டத்தில் ஊரடங்கு
Added : ஜன 17, 2022 | |
Advertisement
 

கடலுார், : கடலுார் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டன. கொரோனா, ஒமைக்கிரான் தொற்று பரவல் காரணமாக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்று 2வது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டது.

மீன், இறைச்சி, காய்கறிகளை பொது மக்கள் நேற்று முன்தினமே வாங்கி வைத்துக் கொண்டனர். நேற்று மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களை போலீசார் கண்டு கொள்ளவில்லை. முக கவசம் அணியாதவர்களை பிடித்து அபராதம் விதித்தனர். ஆட்டோ, வேன், பஸ் போன்ற வாகனங்கள் ஏதும் ஓடவில்லை.

சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. சிதம்பரம் சிதம்பரம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பொது மக்கள் நடராஜர் கோவிலுக்கு சென்று பொங்கல் கொண்டாட்டத்தை நிறைவு செய்வர். நேற்று முழு ஊரடங்கு அறிவித்ததால் பொது மக்கள் காணும் பொங்கலை கொண்டாட முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். அரசு அனுமதி அளித்தும் சிதம்பரத்தில் உணவகங்கள் திறக்கவில்லை. வண்டிகேட், கஞ்சித்தொட்டி, மேல வீதி, கீழவீதி, பஸ் நிலையம் உட்பட பல பகுதிகளில் டி.எஸ்.பி.,ரமேஷ்ராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்நெல்லிக்குப்பம்நெல்லிக்குப்பத்தில் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் பல இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். தேவையின்றி பைக்கில் சுற்றியவர்களை எச்சரித்து அனுப்பினர். முககவசம் அணியாமல் பைக்கில் வந்தவர்களிடம் ரூ. 500 அபராதம் வசூலித்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X