கடலுார் : உலக திருக்குறள் பேரவை சார்பில் அரியாங்குப்பம் வள்ளுவர் திடலில் திருவள்ளுவர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பேராசிரியர் குழந்தை வேலனார் தலைமை தாங்கினார். செயலாளர் அருள்ஜோதி வரவேற்றார். உலக திருக்குறள் பேரவையின் மாவட்ட தலைவர் அரிமா பாஸ்கரன் திருவள்ளுவரின் சிலைக்கு மாலையணிவித்தார். பேராசிரியர் ராஜா உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். பொருளாளர் பத்மநாபன் நன்றி கூறினார்.