அவலுார்பேட்டை : மேல்மலையனுார் பகுதியில் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கன்னலம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்ரமணியன், செல்விராமசரவணன், ஒன்றிய கவுன்சிலர் சியாமளா ஜெய்சங்கர் முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் தமிழரசி பாண்டியன் வரவேற்றார்.ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சுப்ரமணியன் பங்கேற்றனர்.இதே போல் கோவில்புரையூர், செவலபுரை, மேலச்சேரி, பெருவளூர், கெங்கபுரம், சமத்தகுப்பம் உள்ளிட்ட கிராமங்களிலும் வழங்கப்பட்டது.