திருக்கோவிலுார், : திருக்கோவிலுாரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வரும் பணிகளில் அரசியல் தலையீட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு, விளந்தை ஊராட்சித் தலைவர் பூமா, வில்லியம் தலைவர் செல்வி, காட்டுபையூர் தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட ஊராட்சித் தலைவர்கள் சார்பில் பி.டி.ஓ., அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் அரசியல் தலையீட்டை கண்டித்து பேசினர்.